2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஹத்துருசிங்கவின் மீதான விருப்பம் வெளிப்படுத்தப்பட்டது

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் சந்திக ஹத்துருசிங்கவை நியமிப்பதற்கு விரும்புவதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்கவை நியமிப்பதற்கு விரும்புகிறோம் என இலங்கை கிரிக்கெட் சபை வெளிப்படுத்திய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.

இவ்வாண்டு ஜூனில், தனது பதவியிலிருந்து கிரஹாம் போர்ட் இராஜினா செய்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி வெற்றிடமாகியிருந்தது. களத்தடுப்புப் பயிற்சியாளராக நிக் போத்தாஸே தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .