2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹமில்டன், போத்தாஸை தடுத்து வென்றார் லெக்கலெர்க்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸைத் தடுத்து இத்தாலியன் குரான் பிறீயை பெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க் வென்றார்.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த லெக்கலெர்க், பந்தயத்தின் நடுப் பகுதியில் பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த ஹமில்டனிடமிருந்தும், இறுதிச் சுற்றுக்களில் போத்தாஸிடமிருந்தும் சவால்களை எதிர்கொண்டு, கடந்த வாரம் பெல்ஜியம் குரான் பிறீயில் தனது முதலாவது வெற்றியைப் பெற்று, தனது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஹமில்டன் முந்த முயன்றதைத் தடுக்கும்போது ஓடுபாதையை விட ஹமில்டனை சிறிது விலகச் செய்வது ஒரு கார் முந்துவதற்குரிய இடத்தை லெக்கலெர்க் வழங்கியிருக்காத நிலையில் அதற்கு எச்சரிக்கையை லெக்கலெர்க் பெற்றிருந்தார்.

இப்பந்தயத்தில் போத்தாஸ் இரண்டாமிடத்தையும், ஹமில்டன் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்த நிலையில், றெனோல்ட் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோ நான்காமிடத்தை பெற்றிருந்தார். ஐந்தாமிடத்தை, றெனோல்ட் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ ஹல்கென்பேர்க் பெற்றிருந்தார். றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் எட்டாமிடத்தை பெற்றிருந்ததோடு, பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் 13ஆம் இடத்தைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில் இப்பந்தயத்தின் முடிவில் இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்பின் புள்ளிகள் பட்டியலில் ஓட்டுநர்களின் நிலை பின்வருமாறு,

  1. ஹமில்டன் 284 புள்ளிகள்
  2. போத்தாஸ் 221 புள்ளிகள்
  3. வெர்ஸ்டப்பன் 185 புள்ளிகள்
  4. லெக்கலெர்க் 182 புளோளிகள்
  5. வெட்டல் 169 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .