Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 06 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) அம்பாந்தோட்டையில் இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 17ஆம் திகதி வரையில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தற்போதைய கொவிட்-19 நிலைமை காரணமாக இலங்கை அரசாங்கம், இலங்கை கிரிக்கெட் சபை ஆகியவற்றால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தொற்றுநோய் சூழல்கள் காரணமாக ஆரம்பத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பகுதிகளிலும் தொற்றுநோய் பாதிப்புக்கள் காணப்பட்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னரே இலங்கை கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, போட்டிகளின் போது கடைபிடிக்க வேண்டிய கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்த போட்டிகளை நடத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago