2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘ஹியூஸ் இறந்தவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்’

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் ஒய்வு பெற்றதை விட ஓராண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். தனது நண்பரும் சக அணி வீரருமான பிலிப் ஹியூஸ் இறந்த பின்னர் தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததை மைக்கல் கிளார்க் ஒத்துக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர் மைக்கல் கிளார்க் ஓய்வு பெற்றிருந்தார்.

சிட்னியில் 2014ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற உள்ளூர்ப் போட்டியொன்றில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது கழுத்தில் பந்து தாக்கியதைத் தொடர்ந்து, மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த மைக்கல் கிளார்க், பிலிப் ஹியூஸ் இறந்த பின்னர் தான் இன்னொரு போட்டியில் விளையாடியிருக்கக் கூடாது என்று தெரிவித்ததுடன், அப்போதே தனது விளையாடுக் காலம் முடிந்து விட்டதாகவும் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுதவிர, 2015ஆம் ஆண்டு ஜூனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கக் கூடாது எனத் தெரிவித்த மைக்கல் கிளார்க், அங்கிருந்த ஆறு வாரங்களில் ஓவ்வொரு நாளும் அறையில் அழுது கொண்டே இரவில் நித்திரை கொண்டதாகக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .