2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

2024 ஒலிம்பிக்கை ஹம்பேர்க்கில் நடாத்துவதற்கு எதிராக வாக்களிப்பு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 30 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கையும் பராஒலிம்பிக்கையும் ஜெர்மனில் உள்ள ஹம்பேர்க் நகரத்தில் நடாத்துவதற்கு எதிராக அந்நகரவாசிகள் வாக்களித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான போட்டியில் ஹம்பேர்க்குடன், ரோம், பரிஸ், புடாபாஸ்ட், லொஸ் ஏஞ்செல்ஸ் ஆகிய நகரங்கள் போட்டியிலிலுள்ள நிலையிலேயே மேற்படி முடிவு வெளியாகியுள்ளது.

ஹம்பேர்க் நகரவாசிகளுக்கும், படகோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ள கீல் நகரவாசிகளுக்கும், அங்கு ஒலிம்பிக் நடாத்த வேண்டுமா என நடாத்தப்பட்ட வாக்களிப்பில், 51.7 சதவீதமானோர் இல்லை என வாக்களித்திருந்தனர்.

ஜெர்மனின் தலைநகரான பெர்லினை விட முன்னுரிமை அளித்து ஹம்பேர்க்கையே ஒலிம்பிக்கை நடாத்த போட்டியிடும் நகரமாக ஜெர்மனிய ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவு செய்திருந்தனர்.

இதுதான் முடிவு, நாங்கள் விரும்பவில்லை, இது தெளிவாகவுள்ளது என்று ஹம்பேர்க் மேயர் ஓலப் ஸ்கொல்ஸ் தெரிவித்துள்ளார். 1972ஆம் ஆண்டு முனிச்சில் இடம்பெற்ற ஒலிம்பிக்கையடுத்து ஒலிம்பிக்கை ஜெர்மனி நடாத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .