Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் மன்செஸ்டர் சிற்றி , மன்செஸ்டர் யுனைட்டெட், செல்சி, ஆர்செனல், வெஸ்ட் ஹாம், வெஸ்ட் புரோம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
அடுத்து, சௌத்தாம்டன்-லெய்செஸ்டர் சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியும், லிவர்பூல்-டொட்டேன்ஹாம் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்ற மன்செஸ்டர் சிற்றி அணி, போர்ண்மெத் அணிக்கெதிரான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தரவரிசையில் முதலிடத்துக்கான தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டது. இதில், ரஹீம் ஸ்டேர்லிங் 7வது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றார். தொடர்ந்து, வில்ஃப்ரெட் போனி 11வது நிமிடத்தில் கோலைப் பெற சிற்றி இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றது எனினும், போர்ண்மெத் அணியின் கிளன் மறே 22வது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று ஒரு கோல் முன்னிலையை குறைத்தார்.
எனினும் 29வது நிமிடத்தில் மீண்டுமொரு கோலைப் பெற்ற ஸ்டேர்லிங் இரண்டு கோல் முன்னிலை மீண்டும் அணியைப் பெற வைத்ததுடன், முதற்பாதி முடிவில் மேலுமொரு கோலைப் பெற்று தனது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார். இரண்டாவது பாதி ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில் போனி மீண்டுமொரு கோலைப் பெற அவ்வணி 5-1 என்ற ரீதியில் வெற்றிபெற்றிருந்தது.
அடுத்து மன்செஸ்டர் யுனைட்டெட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் எவர்ற்றன் அணியைத் தோற்கடித்திருந்தது. இதில் மோர்கன் ஷெனெய்டெர்லின் 18, அண்டர் ஹெரேரா 22, வெயின் ரூனி 62வது நிமிடத்தில் கோல்களைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை அஸ்டன் விலா அணியுடான போட்டியில் செல்சி அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதில், 34வது நிமிடத்தில் டியகோ கோஸ்ட்டா ஒரு கோலைப் பெற்றிருந்ததோடு, 54வது நிமிடத்தில் அஸ்டன் விலா அணியின் தடுப்பாட்டக்காரர் அலன் ஹட்டனின் காலில் பட்டு ஒவ்ண் கோல் ஒன்றும் பெறப்பட்டிருந்தது.
தவிர ஆர்செனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வட்ஃபோர்ட் அணியை வீழ்த்தியிருந்தது. இதில், 62வது நிமிடத்தில் அலெக்ஸிஸ் சஞ்செஸ் ஒரு கோலையும், 68வது நிமிடத்தில் ஒலிவர் ஜிரோட் ஒரு கோலையும், 74வது நிமிடத்தில் அன்ரூ ராம்ஸி ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .