2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: நீச்சலில் சாதனையைத் தொடர்கிறார் பெல்ப்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீச்சல் போட்டிகளில், ஏற்கெனவே 18 தங்கப் பதக்கங்களுடன் உலக சாதனையைத் தன்வசம் வைத்திருந்த அமெரிக்காவின் மைக்கல் ஃபெல்ப்ஸ், ஆண்களுக்கான 4*100 மீற்றர் அஞ்சல் நீச்சலோட்டத்தில் தங்கம் வென்று, தனது 19ஆவது தங்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

இன்று மாலை வரையிலான பதக்கப் பட்டியலில், 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களென 12 பதக்கங்களைப் பெற்றுள்ள அமெரிக்கா, முதலிடத்தில் காணப்படுகிறது. 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் சீனாவும், 3 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலியாவும் காணப்படுகின்றன.

தலா 2 தங்கங்களைப் பெற்றுள்ள இத்தாலி, தென்கொரியா, ஹங்கேரி ஆகியன, 4ஆவுது, 5ஆவது, 6ஆவது இடங்களில் காணப்படுகின்றன. இதுவரை 17 நாடுகள், குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தையாவது கைப்பற்றியுள்ளதோடு, 31 நாடுகள், ஏதாவதொரு பதக்கத்தை வென்றுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .