2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் 01; நாள் 01

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 88 ஓவர்களை எதிர் கொண்டு 4 விக்கெட் இழப்பிற்கு 261 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 
 
இதில் யூனுஸ் கான் ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களையும், ஆஷட் ஷபிக்  ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். மிஸ்பா உல் ஹக் 31 ஓட்டங்களைப். இலங்கை அணியின் பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
இலங்கை அணி சார்பாக இந்தப் போட்டியில் உப்புல் தரங்க, கொவ்ஷால் சில்வா, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ், கித்ருவான் விதானகே, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, தம்மிக்க பிரசாத், ரங்கன ஹேரத், சமின்ட எரங்க ஆகியோர் விளையாடுகின்றனர். 
 
பாகிஸ்தான் அணி சார்பாக குராம் மன்சூர், அஹெமெட் செஷாட், ஆசார் அலி, மிஸ்பா உல் ஹக், யூனுஸ் கான்,  ஆஷட் ஷபீக், சப்ராஸ் அஹெமெட், அப்துர் ரெஹ்மான், மொஹமட் தல்ஹா, சைட் அஜ்மல், ஜுனைட் கான் ஆகியோர் இந்தப் போட்டியில் விளையாடுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X