A.P.Mathan / 2014 ஜூன் 22 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற ஆர்ஜன்டீனா அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. ஆர்ஜன்டீனா, ஈரான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற குழு F இற்கான முதற்ப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி 1 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதற்ப் பாதியில் ஆர்ஜன்டீனா அணி ஆதிக்கம் செலுத்திய போதும் கோல்கள் எதனையும் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் மிக சிறப்பாக ஈரான் அணி போராடியது. இதன் மூலம்\போட்டி மிகுந்த விறு விறுப்பை அடைந்தது. போட்டி நிறைவடைய 2 நிமிடங்கள் இருந்த வேளையில் லியனொல் மெஸ்சி அடித்த கோல் மூலம் ஆர்ஜன்டீனா அணி வெற்றி பெற்றது. ஈரான் கோல் காப்பாளர் ஹஜிக்கி ஆர்ஜன்டீனா அணி கோல்களை அடிக்க விடாமல் சிறப்பாக செயற்பட்டு இருந்தார். போட்டியின் நாயகனாக லியனொல் மெஸ்சி தெரிவானார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .