2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

உலக 20-20 இறுதிப் போட்டி இன்று

Super User   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக 20-20 தொடரின் ஆண்கள், மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் இன்று  (06) பங்களாதேஷ் டாக்காவில் நடைபெறவுள்ளன. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை, இந்திய அணிகளும், பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மிகவும் விறு விறுப்புடன் எதிர்பார்க்கபப்டும் போட்டியாக இருக்கின்றது.  இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகள் விறு விருப்பாக இருப்பதும், இறுதிப் போட்டிகளில் அடிக்கடி சந்திப்பதும் இரு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுக் கொள்வதுமே இதற்க்கான காரணமாகும்.

இரு அணிகளும் இதுவரை 19 இறுதிப் போட்டிகளில் சந்தித்துள்ளன. இந்தியா அணி 9 தடவைகளும், இலங்கை அணி 8 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. இரு போட்டிகள் கைவிடப்பட்டன. இரு அணிகளும் உலக 20-20 தொடரில் 2010 ஆம் ஆண்டு மாத்திரமே ஒரு தடவை சந்தித்துள்ளனர். அந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுக் கொண்டது. இதேவேளை 20-20 போட்டிகளில் இரு அணிகளும் 5 தடவைகள் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 3 போட்டிகளிலும், இலங்கை அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆண்களுக்கான போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. பெண்களுக்கான போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்ப்பகல்  2.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய அணிகளுடன் களமிறங்கும் என்றே எதிர் பார்க்கப்படுகின்றது. தினேஷ் சந்திமால் இலங்கை அணியில் இன்றும் விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப் படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X