2025 மே 17, சனிக்கிழமை

17 வருடங்களின் பின் இலங்கைக்கு பதக்கம்

Editorial   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டியில்  செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த  நதீஷா தில்ஹானி லேகம்கே   61.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இலங்கைக்கு 17 வருடங்களின் பின்னர் கிடைத்த முதல் தடகள பதக்கம் இதுவாகும். இப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.  இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன்  26 ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை ஆசிய விளையாட்டுப் போட்டி நடத்தும் சீனா 161 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 297 பதக்கங்களை வென்று  முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

33 தங்கம், 47 வெள்ளி, 50 வெண்கலம் என 130 பதக்கங்களுடன்  ஜப்பான் இரண்டாம் இடத்திலும்,  32 தங்கம், 42 வெள்ளி 65 வெண்கலம் என 139 பதக்கங்களை வென்று தென்கொரியா  மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

 இந்தியா 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தைப்  பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .