2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

டெஸ்ற் இடத்துக்காகப் போராடுகிறார் சுரேஷ் ரெய்னா

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையான உழைத்தால் தன்னால் டெஸ்ற் போட்டிகளில் சிறப்பான பெறுபேற்றுடன் பங்குபற்ற முடியும் என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

அத்தோடு டெஸ்ற் போட்டிகளில் விளையாடும் தனது ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி சார்பாக இதுவரை 17 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றியுள்ள சுரேஷ் ரெய்னா, 28.44 என்ற சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதில், இறுதி 14 டெஸ்ற் போட்டிகளில் அவர் 19.95 என்ற சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, தான் வெறுமனே 17 டெஸ்ற் போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

தான் எப்போதும் கடின உழைப்பிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை கொண்டவர் எனத் தெரிவித்த சுரேஷ் ரெய்னா, கடுமையாக உழைத்தால் தன்னால் 50-60 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்ற முடியும் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ற் தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில் சிறப்பாக ஆடிய போதிலும், இங்கிலாந்துத் தொடரில் தன்னால் சிறப்பாக ஆட முடிந்திருக்கவில்லை எனத் தெரிவித்த சுரேஷ் ரெய்னா, தான் சிறப்பாகத் துடுப்பெத்தாடியிருந்ததாகவும், ஆனால் சிறப்பான மனநிலையும், பொறுமையாக ஆட வேண்டிய தேவையுமுள்ளதாக தெரிவித்தார்.

டெஸ்ற் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாத போதிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் நிலையில் அந்த ஃபோர்மை டெஸ்ற் போட்டிகளில் வெளிப்படுத்த விரும்புவதாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • Shanthi Sunday, 17 February 2013 11:47 AM

    சூப்பர் தல

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .