2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பங்களாதேஷ் தொடருக்கான இந்திய அணி

A.P.Mathan   / 2014 மே 29 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணியுடன் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இந்திய அணி ஜூன் மாதம் செல்லவுள்ளது. இதற்க்கான இந்திய அணி அறிவிக்கபப்ட்டுள்ளது. முக்கிய சிரேஷ்ட வீரர்கள் டோனி, விராத் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிகார் தவான், புவனேஸ்வர் குமார், ரோஹித் ஷர்மா, மொஹமட் சமி, ரவீந்தர் ஜடேஜா ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுளளது. ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்துள்ள ரொபின் ஊத்தப்பா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். புதிய இளைய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை டோனி இல்லாத நேரங்களில் அணியில் விக்கெட் காப்பாளராக சேர்த்துக் கொள்ளப்படும் தினேஷ் கார்த்திக்கும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அணியின் தலைவர், உப தலைவர் ஆகியோர் இல்லாத நிலையில் இந்த அணிக்கு சுரேஷ் ரெய்னா அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. இதேவேளை யுவராஜ் சிங் உம் இந்த அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.  
 
அணி விபரம் சுரேஷ் ரெய்னா, ரொபின் ஊத்தப்பா, அஜிங்கையா ரெஹானே, செட்டேஸ்வர் புஜாரா, அம்பாத்தி ராயுடு, மனோஜ் திவாரி, கெடார் யாதவ், ரிதிமன் சஹா, பர்வேஷ் ரசூல், அக்சார் பட்டேல், வினைகுமார், உமேஷ் யாதவ், ஸ்டுவோர்ட் பின்னி, மோஹித் ஷர்மா, அமித் மிஸ்ரா.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X