2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலக்கக் கிண்ணம் ஐந்தாம் நாள் முடிவுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 17 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ஐந்தாவது நாளின் முதற்ப் போட்டி ஜேர்மனி - போர்த்துக்கல் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜேர்மனி அணி 4 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜேர்மனி அணியின் தோமஸ் முல்லெர் அடித்த மூன்று கோல்கள் ஜேர்மனி அணியின் வெற்றிக்கு  கை கொடுத்தன. போட்டியின் நாயகனாகவும் அவரே தெரிவானார். 12ஆவது நிமிடத்தில் பனால்டி உதை மூலமாக முதல் கோலை அடித்த முல்லர், 46 மற்றும் 78ஆவது நிமிடங்களில் அடுத்த இரண்டு கோல்களையும் அடித்தார். மட்ஸ் ஹமல்ஸ் 32ஆவது நிமிடத்தில் போட்டியின் இரண்டாவது கோலை அடித்தார். குழு G இன் போட்டி இது.

இரண்டாவது போட்டி ஈரான் - நைஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. குழு G இற்காக நடைபெற்ற இந்தப் போட்டி மிகுந்த விறு விறுப்பை வழங்கியது. இரு அணிகளும் கோல்களைப் பெறாத இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இந்த வருட தொடரில் பெறப்பட்ட முதல் சமநிலை முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டி அமெரிக்கா - கானா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்கா அணி 2 இற்கு 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே அமெரிக்கா வீரர் கிளின்ட் டெம்ப்சி முதல் கோலை அடித்தார். அதனை தொடர்ந்து மிகுந்த சுவாரிசியமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 82ஆவது நிமிடத்தில் கானா வீரர் அன்று அயெவ் அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைந்த போதும் 4 நிமிட இடைவெளியில் அமெரிக்கா வீரர் ஜோன் ப்ரூக்ஸ் வெற்றி கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக  கிளின்ட் டெம்ப்சி தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்கா வெற்றி பெற்ற இந்தப் போட்டி குழு G இற்கான போட்டி.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X