2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இந்தியா அணியுடன் இணைகின்றார் டிராவிட்

A.P.Mathan   / 2014 ஜூன் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணியுடன், இந்தியா அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் ஆலோசகராக இணைந்துள்ளார்.  ராகுல் டிராவிட் திங்கட்கிழமை அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளட்சர் அணி முகாமைத்துவம் சார்பாக தன்னுடன் தொடர்பு கொண்டு ராகுல் டிராவிட் அணியுடன் இணைந்து கொண்டு தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது வீரர்களுக்கு சிறப்பாக விளையாட உதவும் என கேட்டுக் கொண்டதையடுத்து, ராகுல் டிராவிட் இடம் தான் இது தொடர்பாக கேட்ட பொது போது டிராவிட் உடனடியாக சம்மதம் தெரிவத்தார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் சஞ்சை பட்டேல் தெரிவித்துள்ளார். டங்கன் பிளட்சர் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ராகுல் டிராவிட் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படவேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் சுனில் கவாஸ்கர் தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு இருந்தார். சுனில் கவாஸ்கர் அவ்வாறு கூறியது தனக்கு மகிழ்ச்சி அழிப்பதாக கூறிய டிராவிட். பயிற்றுவிப்பாளர் பதவி என்றால் வருடத்தில் 11 மாதங்கள் கடமையாற்ற வேண்டும். நான் ஓய்வு பெற்று சிறிய காலம்தான் ஆகின்றது. எனவே அதற்க்கு இன்னமும் நேரம் தேவை என மேலும் கூறி இருந்தார். 
 
ராகுல் டிராவிட் இங்கிலாந்தில் வைத்து சிறப்பாக செயற்ப்பட்ட இந்தியா வீரர். 1376 ஓடங்களை 13 டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ளார். இதில் 6 சதங்கள் உள்ளடக்கம்.  இதேவேளை இங்கிலாந்து பிராந்திய அணியான கென்ட் அணிக்காக 2000 ஆம் ஆண்டு விளையாடிய போதும் சிறப்பாக  செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராகுல் டிராவிட் அணியுடன் இணைந்து ஆலோசகராக செயற்ப்படுவது அணிக்கு மேலதிக பலத்தை கொடுக்கும் என நம்ப்படுகின்றது. இதேவேளை 5 டெஸ்ட் போட்டிகளில்  விளையடவுள்ளமையினால் இளைய வீரர்களுக்கு மைதானங்கள் பற்றியும் அவற்றிற்க்கான தேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள டிராவிட்டின் பங்கு உதவியாக இருக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X