2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்றது சிம்பாவே

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்களாக திகழும் அவுஸ்திரேலியா அணியை 31 வருடங்களின் பின்னர் சிம்பாவே அணி முதற் தடவையாக வென்றுள்ளது. 1983ஆம் ஆண்டு தமது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சிம்பாவே அணி - அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாவது தடவையாக தற்போது வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் சிம்பாவே அணி அவுஸ்திரேலியா அணியை 3 விக்கெட்களினால் வெற்றி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. 
 
ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும், ப்ரட் ஹடின் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரோஸ்பர் உட்டேய்ஸா, டொனால்ட் டிரிபானோ, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அணித் தலைவர் எல்ட்டன் சிக்கும்புரா ஏழாம் இழக்க வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்று தனது அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அவருடன் இணைந்து துடுப்பாடிய ப்ரோஸ்பர் உட்டேய்ஸா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பிரண்டன் டெய்லர் 32 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். எட்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக எல்ட்டன் சிக்கும்புரா, ப்ரோஸ்பர் உட்டேய்ஸா ஆகியோர் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் நேதன் லயொன் 4 விக்கெட்களையும், மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
போட்டியின் நாயகனாக ல்ட்டன் சிக்கும்புரா தெரிவு செய்யப்பட்டார்.
 
431 போட்டிகளில் விளையாடியுள்ள சிம்பாவே அணி 113 போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்றுள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் முழு அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளில் பங்களாதேஷ் அணியை தவிர்த்து மற்றைய நாடுகளுடன் விளையாடியுள்ள 325 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 49 வெற்றிகளை சிம்பாவே அணி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணியை 28 தடவைகள் வென்றுள்ளது.

  Comments - 0

  • muthu pandi Tuesday, 02 September 2014 07:37 AM

    Good news

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .