2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மாலிங்கவுக்கு இடது காலில் சத்திரசிகிச்சை

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, தனது கணுக்கால் உபாதைக்கு நாளைய தினம்(22) சத்திர சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதன் மூலம் 16 வாரங்களிற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்படும். 
 
உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சரியாக தன்னை தயார்படுத்தும் நோக்கில் இந்த சத்திர சிகிச்சையை லசித் மாலிங்க மேற்கொள்ளவுள்ளார். செப்டெம்பர் ஐந்தாம் திகதி, ஊசி மூலமான சிகிச்சைக்கு அவர் கால் வலி மாற்றங்கள் எதனையும் வழங்காத நிலையில் தனது சொந்த விருப்பின் பேரில் சம்பியன் லீக் போட்டிகளில் லசித் மாலிங்க விளையாடினார். இனி அடுத்த கட்ட சிகிச்சை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
அவுஸ்திரேலியா, மெல்பேர்னில் வைத்திய நிபுணருடன் கலந்து பேசிய பின்னர், நீண்ட நாள் உபாதைக்கு முற்றுப் புள்ளி வைத்து உலகக்கிண்ணத்திற்கு முன்னர் குணமடையும் வகையில் தன்னை தயார் செய்யக் கூடிய வகையில் இந்த சத்திர சிகிச்சையை லசித் மாலிங்க மேற்கொள்ளவுள்ளார். எந்த பிரச்சினைகளும் சத்திர சிகிச்சையில் ஏற்படாவிட்டால் ஜனவரி மாத நடுப்பகுதியில் லசித் மாலிங்க பயிற்சிகளில் ஈடுபடமுடியும் என நம்பப்படுகின்றது. பெப்ரவரி 14 ஆம் திகதி, இலங்கை அணியானது நியூசிலாந்து அணியுடன் ஆரம்பப் போட்டியில் விளையாடவுள்ளது. 
 
தன்னால் உலகக்கிண்ணத்திற்கு முன்னர் சரியான முறையில் தயார் செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மாலிங்க, இன்னும் ஒரு பந்துவீச்சாளரை இந்தக் காலப்பகுதிக்குள் தயார் செய்ய முடியும் எனவும் அது அணிக்கு நன்மை தரும் எனவும் அவர் கூறியுள்ளார். பந்துவீசும் காலை நிலத்தில் பதிக்கும் போது வலி ஏற்ப்பட்டால் பந்தின் வேகம் குறையும். நேர்த்தியாக பந்துவீச முடியாது. அதன் காரணமாகவே கடந்த போட்டிகளில் சிறப்பாக பந்துவீச முடியாமல் போய்விட்டது என மாலிங்க மேலும் கூறியுள்ளார்.    
 
அவுஸ்திரேலியாவில் 10 நாட்கள், சத்திரசிகிச்சையின் பின்னர் தங்கி இருந்து பகுதியளவில் குணமடைந்த பின்னர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .