2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மே.இ.தீவுகளுக்கு வெற்றி; இந்தியா முதலிடத்தை இழந்தது

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இந்தியா, கொச்சியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 124 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியா அணி தரப்படுத்தல்களில் முதலிடத்தை இழந்துள்ளது.  
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மார்லன் சாமுவேலஸ் ஆட்டமிழக்காமல்  126 ஓட்டங்களையும், டினேஷ் ராம்டின் 61 ஓட்டங்களையும், டுவைன் ஸ்மித் 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்களை கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 41 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சிகார் தவான் 68 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரவி ராம்போல், டுவைன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் அடங்கிய தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெற்றால் மாத்திரமே இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .