2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஓய்வை பிற்போட சங்ககார யோசனை

A.P.Mathan   / 2014 நவம்பர் 22 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் வீரர் சகலவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் இடம் சங்ககார தெரிவித்து இருந்தார். உலகக்கிண்ணத்திற்கு பின்னர் ஓய்வு பெறுவதாகவே அவர் தெரிவுக்குழுவுக்கு அறிவித்து இருந்தார். 
 
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டாம். இன்னும் சிறிது காலம் விளையாடி ஓய்வு பெறுமாறு கேட்டுள்ளனர். அணியில் இருந்து இரு சிரேஸ்ட வீரர்கள் ஓய்வு பெற்றால் அணிக்கு பின்னடைவை உருவாக்கும், எனவே குறித்த முடிவு பற்றி யோசிக்குமாறு கோரியுள்ளனர். இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தொடந்து விளையாடுவதா ஓய்வு பெறுவதா என யோசித்து வருவதாக குமார் சங்ககார தெரிவித்துள்ளார். 
 
நியூசிலாந்தில் நடைபெறவிருந்த டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது என்ற முடிவையே குமார் சங்ககார எடுத்து இருந்தார். ஏற்கனவே 20 - 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .