2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கை அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 நவம்பர் 27 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் ஆரம்பித்த 7 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதற் போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது. இதில் திலகரட்ன டில்ஷான் 88 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 55 ஓட்டங்களையும், குஷால் பெரேரா 52 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ரெட்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மூயேன் அலி 119 ஓட்டங்களையும், ரவி போபரா 65 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
இலங்கை அணியின் பந்துவீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்களையும், அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக திலகரட்ன டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். 
 
இலங்கை அணி தொடர்ச்சியான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றுள்ள அதேவேளை இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான ஏழாவது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .