George / 2015 மார்ச் 18 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
மழை விட்டதும் மீண்டும் போட்டி ஆரம்பமான நிலையில் 37ஆவது ஓவர் 2ஆவது பந்துவீச்சில் இறுதி விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் சிட்னி மைதானத்தில் இன்று புதன்கிழமை(18) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
குமார் சங்கக்கார 96 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களையும் லஹிரு திரிமான 45 பந்துகளுக்கு முகங்கொடுத்து 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென்னாபிரிக்க அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .