2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இரண்டாவது தடவையாக தர்மசேன

Thipaan   / 2015 மார்ச் 28 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்ற இலங்கையின் நடுவர் குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டி ஒன்றில் நடுவராக கடமையாற்றும் முதலாமவர் குமார் தர்மசேன என்பது குறிப்பிடத்தக்கது.

1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலக சம்பியன் ஆகிய வேளை, இலங்கை அணியில் குமார் தர்மசேன விளையாடி இருந்தார்.

43 வயதான குமார் தர்மசேன, 19 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டி ஒன்றில் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார்.

2011ஆம் ஆண்டு சிறந்த நடுவர் விருதைப் பெற்ற இவர், கடந்த இரண்டு வருடங்களும் சிறந்த நடுவர் விருதைப் பெற்ற ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ உடன் இணைந்து கடமையாற்றவுள்ளார்.

மூன்றாவது நடுவராக தென் ஆபிரிக்காவின் மறையஸ் ஏறஸ்மஸ் கடமையாற்றவுள்ள அதேவேளை, இங்கிலாந்து நடுவர் இயன் குட் கடமையாயற்றவுள்ளார்.

இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு கடந்த இரண்டு தடவைகள்  தெரிவாகியமையினால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை போட்டி மத்தியஸ்தராக பல வருடங்களாக திகழ்ந்து வரும் ரஞ்சன் மடுகல்ல அந்த வாய்ப்பை இழந்தார்.

இம்முறை 2003, 1999 ஆண்டு இறுதிப்போட்டிகளுக்கு  பின்னர், ரஞ்சன் மடுகல்ல மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .