Thipaan / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார்.
இதே அணிக்காகவே கெவின் பீட்டர்சன் தன் மீள் வருகைக்காக விளையாட ஆரம்பித்துள்ளார்.
அவர் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சரே அணி, முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
109 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள ஸ்டீவன் டேவிஸ் மற்றும் குமார் சங்ககார ஆகியோர் இணைந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .