2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தண்டனையில் இருந்து தப்பினார் விராத் கோலி

A.P.Mathan   / 2015 மே 19 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களுர் ரோயல் சலஞ்செர்ஸ் அணியின் தலைவர் விராத் கோலி, ஊழல் தடுப்பு விதிமுறையை மீறிய குற்றத்திலிருந்து தப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை டெல்லி டெயார் டெவில்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் கோலி தன்னுடைய காதலி அனுஷ்கா ஷர்மாவை பார்வையாளர் அரங்கில் சென்று சந்தித்தார். போட்டி ஒன்று நடைபெறும் போது அணியுடன் சம்மந்தப்பட்டவர்கள், தொடர்பாடலுக்கு அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வீரர்கள் வேறு யாரையும் சந்திக்கவோ, பேசவோ முடியாது என்பது சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விதிமுறை. 

ஐ.பி.எல் தொடரிலும் அதே விதிமுறை பாவிக்கப்படுகின்றது. இந்த விதிமுறையை மீறியமைக்காக கோலிக்கு குறைந்தது தண்டம் அறவிட முடியும். ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரி இந்த விடயம் தொடர்பாக விராத் கோலிக்கு அறிவித்த அதேவேளை, சிறிய குற்றமாக இதனை கருதி அவரை விடுவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .