A.P.Mathan / 2015 ஜூலை 17 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவின்போது அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதலாவது போட்டியில் விளையாடிய அணியிலிருந்து இரண்டு வீரர்கள் மாற்றப்பட்டு அவுஸ்திரேலிய அணி களமிறக்கப்பட்டது.
தனிப்பட்ட காரணங்களுக்காக விக்கெட் காப்பாளர் பிரட் ஹடின் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக பீற்றர் நெவிலும், ஷேன் வொட்சன் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் மிட்செல் மார்ஷூம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முதலாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியே இரண்டாவது போட்டியிலும் மாற்றமின்றி விளையாடுகிறது.
ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாகக் களமிறங்கிய கிறிஸ் ரோஜர்சும், டேவிட் வோர்னரும் நிதானமாகத் துடுப்பாடி 78 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டுக்காககச் சேர்த்தனர். டேவிட் வோர்னர் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் மொயின் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த ஸ்டீபன் ஸ்மித், கிறிஸ் ரோஜர்ஸூடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை வலுவாக்கினார்.
முதல் நாள் ஆட்ட முடிவின்போது கிறிஸ் ரோஜர்ஸ் 158 ஓட்டங்களுடனும், ஸ்டீன் ஸ்மித் 129 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருக்க அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.ந்து ஓட்ட எண்ணிக்கையை வலுவாக்கினார்.
முதல் நாள் ஆட்ட முடிவின்போது கிறிஸ் ரோஜர்ஸ் 158 ஓட்டங்களுடனும், ஸ்டீன் ஸ்மித் 129 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருக்க அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
34 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago