2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

2021 வரை பார்சிலோனாவில் மெஸ்ஸி

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுடன் புதிய ஒப்பந்தமொன்றில் லியனல் மெஸ்ஸி கைச்சாத்திட்டுள்ளார். தனது பழைய ஒப்பந்தத்தில் இன்னமும் ஓராண்டைக் கொண்டிருந்த மெஸ்ஸி, புதிய ஒப்பந்தத்தின்படி 2021ஆம் ஆண்டு வரை பார்சிலோனாவிலேயே தொடரவுள்ளார்.

ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரரான லியனல் மெஸ்ஸியை அவர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பகுதியில் வாங்குவதானால் 700 மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 13 வயதில் பார்சிலோனாவில் இணைந்த 30 வயதாகும் மெஸ்ஸி, 602 போட்டிகளில் பார்சிலோனாவுக்காக பங்குபற்றி 523 கோல்களைப் பெற்றுள்ளார். இது தவிர, எட்டு தடவைகள் லா லிகாவையும் நான்கு தடவைகள் சம்பியன்ஸ் லீக்கையும் வென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .