Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 25, சனிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 10 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025-ல் தனது முதல் கோலை பதிவு செய்தார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப் அணிக்காக விளையாடிய போது இந்த கோலை அவர் பதிவு செய்தார். கிளப் மற்றும் தேசிய அளவில் இது அவரது 917-வது கோல்.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை கடந்த 2023-ல் ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது அல் நசர் கிளப் அணி. அவர் இந்த ஆண்டு ஜூன் வரையில் அல் நசர் அணியோடு விளையாடும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் வியாழக்கிழமை (09) அன்று ரியாத் நகரில் சவுதி புரோ லீக் தொடரில் அல் ஓக்தூத் அணியுடனான போட்டியில் ரொனால்டோ விளையாடினார். இதில் எதிரணி 8-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது. இருப்பினும் அதற்கான பதில் கோலை அல் நசர் அணி வீரர் சாடியோ மானே 29-வது நிமிடத்தில் பதிவு செய்தார்.
தொடர்ந்து 42-வது நிமிடத்தில் அல் நசருக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் ரொனால்டோ. இதன் மூலம் தனித்துவ வரலாற்று சாதனையை அவர் படைத்தார். கடந்த 2002 முதல் தொழில்முறை கால்பந்தாட்ட களத்தில் தொடர்ச்சியாக 24 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோல் பதிவு செய்து அசத்தியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் கிளப் மற்றும் தேசிய அணிக்காக விளையாடி 43 கோல்களை பதிவு செய்திருந்தார். அதற்கு முந்தைய ஆண்டில் 54 கோல்களை பதிவு செய்திருந்தார்.
இந்த செனகல் நாட்டை சேர்ந்த சாடியோ மானே 88-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை பதிவு செய்தார். இதன் மூலம் 3-1 என்ற கோல் கணக்கில் அல் நசர் வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் ரொனால்டோ பதிவு செய்த முதல் கோலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘ஆயிரம் கோல்களை நோக்கி அபூர்வ வீரர்’ என அவரை போற்றி வருகின்றனர். அடுத்த மாதம் அவர் 40 வயதை எட்ட உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
9 hours ago