Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஜூன் 21 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அவுஸ்திரேலிய அணி சார்பாக, ஜஹை றிச்சர்ட்ஸனை பற் கமின்ஸ் பிரதியிட்டிருந்தார். இலங்கையணி சார்பாக உபாதைக்குள்ளான துஷ்மந்த சமீரவை காயத்திலிருந்து குணமடைந்த வனிடு ஹஸரங்க பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்பத்திலேயே நிரோஷன் டிக்வெல்லவை கிளென் மக்ஸ்வெல்லிடம் இழந்தது. பின்னர் குசல் மென்டிஸ், பதும் நிஸங்கவையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் கமின்ஸ், மார்ஷிடம் இழந்தது.
பின்னர் சரித் அஸலங்கவின் இணைப்பில் இனிங்ஸை நகர்த்திச் சென்ற தனஞ்சய டி சில்வா 60 (61) ஓட்டங்களுடன் மார்ஷிடம் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த அணித்தலைவர் தசுன் ஷானகவும் உடனேயே ரண் அவுட்டானார். தொடர்ந்து வந்த டுனித் வெல்லாகேயின் இணைப்பில் ஓட்டங்களை அஸலங்க சேகரித்த நிலையில் மத்தியூ கூனமனிடம் வெல்லாகே வீழ்ந்தார். சிறிது நேரத்தில் சாமிக கருணாரத்னவும் கூனமனிடம் வீழ்ந்தார்.
இந்நிலையில் தனது கன்னிச் சர்வதேசப் போட்டி சதத்தைப் பூர்த்தி செய்த அஸலங்க, 110 (106) ஓட்டங்களுடன் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த ஜெஃப்ரி வன்டர்சே, மகேஷ் தீக்ஷன ரண் அவுட்டாக 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை இலங்கை பெற்றது.
3 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
51 minute ago
2 hours ago