2025 ஜூலை 17, வியாழக்கிழமை

48 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறை

Editorial   / 2023 ஜூலை 02 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் தோல்வி கண்டு மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியுள்ளது.

தகுதி சுற்றில்  நடந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொண்டது ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் களமிறங்கிய அந்த அணி, 43.5 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி, 45 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பு மற்றும் 6.3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ஸ்கொட்லாந்து வீரர்கள் மேட் கிராஸ் (107 பந்துகளில் 74 ஆட்டமிழப்பு இல்லை), பிரண்டன் மெக்முல்லன் (106 பந்துகளில் 69) ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் 10 அணிகளில் இடம்பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு முறை (1975 மற்றும் 1979) சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இல்லாமல் நடைபெறபோகும் முதல் உலகக்கோப்பையாக இது அமையப்போகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X