Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஏப்ரல் 13 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டன் டி காக் - கே.எல்.ராகுல் ஓப்பனர்களாக களமிறங்கினர். 3-வது ஓவரை வீசிய கலீல் அகமது பந்தில் குயின்டன் டி காக் 19 ஓட்டங்களில் எல்பிடபள்யூ ஆனார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 5வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் அதேபோல எல்பிடபள்யூ ஆனது ஆச்சரியம். 3 ஓட்டங்களில் கிளம்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களில் விக்கெட் ஆனதும், அதேஓவரில் அடுத்து நிக்கோலஸ் பூரன் டக்அவுட் ஆனதும் லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. போராடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுலும் 39 ரன்களில் அவுட்டாக 10 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்த லக்னோ 80 ஓட்டங்களை சேர்த்திருந்தது.
ஆயுஷ் பதோனி - தீபக் ஹூடா இணைந்து கள நிலவரத்தை மாற்றுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்க, தீபக் ஹூடா 10 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் ஆயுஷ் பதோனி பொறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக நிற்காமல் க்ருணால் பாண்டியா 3 ஓட்டங்களில் விக்கெட்டானார்.
அடுத்து வந்த அர்ஷத் கான் நிதானத்தை கடைப்பிடித்து துணை நிற்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 167 ஓட்டங்களைச் சேர்த்தது.
168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், பிரித்வி ஷா - டேவிட் வார்னர் இருவரும் ஓப்பனிங் செய்தனர். யாஷ் தாக்குர் வீசிய பந்தில் போல்ட் ஆன வார்னர் எட்டு ஓட்டங்களுடன் வெளியேறவே, ஆறு பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் சேர்த்தார் பிரித்வி ஷா.
அடுத்து இறங்கிய ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐந்து சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் என 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ரிஷப் பந்த் 41 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ஓட்டங்கள், ஷாய் ஹோப் 11 ஓட்டங்கள் என 18.1 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025