2021 ஜூன் 14, திங்கட்கிழமை

உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 01 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமொன்றுக்கு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பாலத்தடியில் கடமையிலிருந்த பொலிஸார், இந்த உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியபோதிலும்,  அதன் சாரதி உழவு இயந்திரத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இந்நிலையில், உழவு இயந்திரத்தைச் துரத்திச்சென்று அதன் டயருக்கு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதுடன், சாரதியையும் கைதுசெய்துள்ளதாகவும்; பொலிஸார் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .