2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2017 மே 30 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்குடாவில் எத்தனோல் உற்பத்தி நிலையம் தொடர்பான செய்தி சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை 10ஆம் திகதிக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஷ்வான் ஒத்திவைத்துள்ளார்.

எத்தனோல் உற்பத்தி நிலைய  ஊழியர்களான சந்தேக நபர்கள் இருவர், நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த எத்தனோல் உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்குச் ஊடகவியலாளர்கள் இருவர் மீது, கடந்த மார்ச்  21ஆம் திகதி அங்கு பணியாற்றும் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .