Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மக்களது அபிப்பிராயம் பெறப்படாமல், பெற்றி கம்பஸில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவதாக, ஏறாவூர் நகர சபைத் தலைவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பில், மட்டக்களப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை குறித்து ஆராயும் விசேட கூட்டம், ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது.
ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், பிரதேச வைத்தியர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள், நகர சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தனது கருத்தை வெளியிட்ட நகர சபைத் தலைவர், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குணமடைய வேண்டும். அவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாம் மனிதாபிமான ஆதரவை வழங்கத் தயார்.
“ஆனால், கொரோனாவுடன் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத அப்பாவி மக்களிடத்தில் கொரோனாவை வலிந்து திணிப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.
“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படவிருப்பதையும் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
“மேலும், எமது பிரதேச வைத்தியசாலைகளில் போதிய வைத்திய வசதிகள், ஆளணிகள் மிகவும் பற்றாக்குறையாக இருக்கின்ற இந்தத் தருணத்தில் மேலும் மேலும் எமது மக்களைப் பாதிப்படையச் செய்யும் எந்த முயற்சியையும் ஏறாவூர் நகர சபை இன, மத பேதமற்றுக் கண்டிக்கிறது” என்றார்.
நகர நபையின் இந்தத் தீர்மானத்தை உடடியாக ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சுக்கும் அனுப்பி வைக்குமாறு, நகர சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக்கை, நகர சபைத் தலைவர் பணித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago