2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் ப.நோ.கூ.ச ஊழியர்கள் 36 பேருக்கு மிகை ஊதியம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 மே 31 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பல்வேறு பணித் தரங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் 36 பேருக்கு மே மாதச் சம்பளத்துடன், மேலும் ஒரு மாதச் சம்பளம் மிகை ஊதியமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது என அச்;சங்கத்தின் பொது முகாமையாளர் எம்.எல்.அப்துல் லத்தீப், இன்று தெரிவித்தார்.

இவர்களுக்கு மொத்தமாக 4 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஊழியர்களுக்கு, ஒரு மாத மிகை ஊதியத்தை வழங்கும் செயற்றிட்டமானது, 2000ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பில், ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மாத்திரமே ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கிகரித்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், வருடாந்தம் இத்தகைய மிகை ஊதியத்தை வழங்கி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .