Yuganthini / 2017 மே 21 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், இன்று அதிகாலை வேளையில், மூன்று வர்த்தக நிலையங்கள், ஆலயம் மற்றும் வீடொன்று என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரின் அரடி மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூன்றும் வீடு ஒன்றும் ஆலயம் ஒன்றின் களஞ்சியசாலையுமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதன்போது, சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்களும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய, விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பங்கள் தொடர்பில், சி.சி.டிவி கெமராக்களின் பதிவுகளைக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
50 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago
1 hours ago