2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய இளைஞன் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 09 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
 

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி 2இல் கஞ்சாவுடன் நடமாடிய இளைஞன், இன்று புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறப்பட்ட குறித்த இளைஞன் நடமாடித் திரியும் பகுதிக்குச் சென்ற பொலிஸ் ரோந்துப் பிரிவினர், அங்கிருந்து கஞ்சாவுடன் இவரைக் கைதுசெய்துள்ளனர்.
 
களுவன்கேணியிலுள்ள வீதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட 21 வயதான சந்தேகநபரிடமிருந்து 3,590 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .