2021 ஜூன் 16, புதன்கிழமை

'கைதிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள்'

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிழக்கு மாகாண சபை ஊடாக வாழ்வாதார உதவித் திட்டங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை விடுதலைசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியை அவரின் இல்லத்தில் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கையினை எடுத்துள்ள ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

விடுதலை செய்யப்பட்டு மட்டக்களப்பு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலத்துக்காக அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை ஊடாக சுயதொழில் நிதிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிப்பதற்கான என்னால் முடிந்த உதவிகளை செய்யவுள்ளேன்.

இதுபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு எமது புலம்பெயர் உறவுகளும் பொது அமைப்புகளும் உதவ முன்வரவேண்டும்.

இதேநேரம்,ஜனாதிபதி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .