2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

செமட்ட செவன வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2017 மே 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

'செமட்ட செவன' எனும், ஆயிரம்  வீடமைப்புத் திட்டத்தின் கீழ், ஏறாவூரில் 82 வறிய குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல்லை,  கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஸீர் அஹமட், இன்று (19) நாட்டி வைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக அரச உதவியாக 10 பேர்ச்சஸ் காணியும், 5 இலட்சம் ரூபாயும் வழங்கப்படுகின்ற அதேவேளை, பயனாளிகளான வறிய குடியிருப்பாளர்கள் இரண்டரை இலட்சம் ரூபாயைச் செலவு செய்து இந்த வீட்டை நிர்மாணிக்கும் வகையில் ,செமட்ட செவன ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் நாடு பூராகவும் அமுலாக்கப்படுகிறது.

அந்த வகையில் ஏறாவூர் தாமரைக்கேணி கிராமத்தில் 21 வீடுகளும் மீராகேணி ஸம்ஸம் கிராமத்தில்  25 வீடுகளும், ஸக்காத் கிராமத்தில் 36 வீடுகளும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன.

ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையில், இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் உட்பட அதிகாரிகளும் பயனாளிகளும் பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வீட்டுத் திட்டத்துக்குச் சமாந்தரமாக, தலா ஒரு வீட்டுக்கு குறைந்தது ஒரு மரம் எனும் திட்டத்தையும் முதலமைச்சர் ஆரம்பித்து, நாட்டி வைத்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .