Freelancer / 2025 டிசெம்பர் 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
14 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இந்த டின்மீன் தொகை, நேற்று பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம, மேற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பிராந்தியத் கட்டளை அதிகாரி கொமடோர் அருண விஜேவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டயனா பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைதீவு அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். (a)

55 minute ago
3 hours ago
05 Dec 2025
05 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
05 Dec 2025
05 Dec 2025