ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 மே 29 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத்துறை சம்பந்தமான சகல வளங்களையும் கொண்ட கட்டட நிர்மாணத்துக்குத் தேவையான நிபுணர்களை உருவாக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் கேட்டுக்கொண்டமைக்கு அமைய அதற்கு அவர் இணங்கிய நிலையில், அதற்குரிய திட்ட முன்மொழிவு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தச்சர்கள், கொத்தர்கள், மின்னியலாளர்கள், குழாய் பொருத்துநர்கள், காய்ச்சி ஒட்டுநர்கள், பட வரைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரை உருவாக்க முடியும்.
இந்தத் திட்டம் அமுலாகும் பட்சத்தில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வீடமைப்பு கட்டட நிர்மாணப் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். இந்த நிலையங்களின் மூலம் கட்டட நிர்மாணத்துறையில் இளைஞர், யுவதிகளை நிபுணத்துவம் வாய்ந்தர்களாக உருவாக்க முடியும்.
இயற்கைப் பேரிடர்;, காலநிலை மாற்றம், உள்ளூர் வளங்கள் இவற்றுக்குப் பொருத்தமான வகையில் கட்டட நிர்மாணப் பணிகளை அமுலாக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், உள்ளூர் வளங்களைக் கொண்டு இயற்கைச் சூழலுக்கு இசைவாக வீடுகளைக் கட்டவும் இவர்களால்; முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த வருடத்தில் அரசாங்கத்தினுடைய கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டு, விகிதாசாரப்படி வீடமைப்பும் இன்னபிற அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
29 minute ago
38 minute ago
3 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
3 hours ago
27 Oct 2025