2021 ஜூன் 24, வியாழக்கிழமை

‘பொதுத் தேர்லில், தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்கள்’

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

தமிழ்த் தலைவர்களின் சுயநல அரசியல் செயற்பாட்டுக்கு, வரும்  பொதுத் தேர்லில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமலை), “தமிழ்த் தேசியம் பேசி, தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது” என்றார்

சமகால அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக இன்று (07) ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.

சம்பந்தன், சுமந்திரன் நினைத்திருந்தால் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வை எப்போதே பெற்றுக்கொடுத்திருப்பார்கள் என்றும் ஆனால், தமிழ் மக்களை வாழவைக்கும் எண்ணம் அவர்களிடத்தில் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், கதிரையைத் தக்கவைத்துக்கொண்டு, சுயநல அரசியல் செயற்பாட்டையே அவர்கள் முன்னெடுக்கின்றார்கள் எனக் குற்றஞ்சாட்டிய அவர், தமிழ் மக்களைச் சரியான பாதையில் வழிநடத்தி, மறுமலர்ச்சியடைந்த இனமாக மாற்றுவதற்கு தூரநோக்குடைய சிந்தனையுள்ள அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டுமென்றார்.

இல்லையென்றால், தமிழ் இனத்தின் ஆணிவேர் அறுந்து, தமிழினமே இல்லாமல் போகும் நிலையேற்படுமெனவும் அவர் கூறினார்.

“நாட்டிலே வாழ்வதற்குரிய உரிமை, அடிப்படைத் தேவைகள் உட்பட அனைத்து அரசியல் தீர்வுகளையும் புதிய அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கு தமது அரசியல் பலத்தை தமிழ்மக்கள் நிரூபித்துக் காட்டனும். இல்லையென்றால் தமிழ் மக்களின் கோவணமும் பறிபோகும்” என்றார்.

எனவே, வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தை தூரநோக்குடன் சிந்தித்து, நாடாளுமன்றத்துக்கு நல்ல அரசியல் தலைவர்களை அனுப்பி வைக்க வேண்டுமென, அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .