2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாசிக்குடா கடற்கரையில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாசிக்குடா கடற்கரையில் சிரமதானப் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை சுற்றுலா அதிகாரசபையும் கிழக்கு மாகாண கரையோர ஹோட்டல்கள் ஒன்றியத்தின் அமைப்பும் இணைந்து பாசிக்குடா கடற்கரையில் சிரமதானப்பணியை மேற்கொண்டன.

இலங்கை சுற்றுலா அதிகாரசபையின் பாசிக்குடாவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.மாஹிர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கரையோர ஹோட்டல்கள் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்த விக்ரமசிங்ஹ, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக நவரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X