2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மாடுகள் திருட்டு; இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

௭ம்.ஐ. பாறூக்

ஏறாவூர்பற்று,  கரடியனாறு பொலிஸ் பிரிவில், மாடுகளைத் திருடி விற்பனை செய்துவந்த சந்தேக நபர்கள் இருவரையும், இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன்  உத்தரவிட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் நிலையப் பரிசோதகர் , எம்.ஐ. வஹாப் தலைமையிலான பொலிஸ் குழுவே, இவர்களைக் கைதுசெய்து,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியது .

இதனோடு தொடர்புபட்ட மேலும் பலர் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரடியனாறு பொலிஸ் பிரிவின் இலுக்குப்பொத்தானை எனுமிடத்தில்,  இருவர் மாடுகளைத் திருடி, தன்னாமுனை  பிரதேசத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர் எனக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததாக, பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .