2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

மது அருந்துவோருக்கு எதிராக நடவடிக்கை

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

பொதுஇடங்களில் மது அருந்துகின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு பொது இடங்களில் மது அருந்துகின்றவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறும் பிரதேச சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மைக்காலமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகரித்துவரும் இச்செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே பிரதேச சபையால்  இவ்வாறு தீர்மானம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.

தகவல்களை வழங்குகின்றவர்கள் 067-2277330 எனும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .