2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மொழிப் பிரச்சினையால் சிரமம்

வ.துசாந்தன்   / 2017 மே 29 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

மட்டக்களப்பில்; கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துப் பொலிஸார் சிலரும் வாகனச் சாரதிகளும் மொழிப் பிரச்சினையால் தொடர்பாடலில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்;துத் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பில்; கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துப் பொலிஸார்; சிலருக்கு தமிழ்மொழி தெரியாமல்; இருப்பதன் காரணமாக தொடர்பாடல் பிரச்சினையில் இங்குள்ள வாகனச்; சாரதிகள் நாள் தோறும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நான் கடிதம் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, அக்கடித்தை கவனத்திற்கொண்ட ஜனாதிபதியின் செயலாளர், மட்டக்களப்பில்; தமிழ்மொழி; தெரிந்த பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு அல்லது பொலிஸாருக்கு தமிழ்மொழியைக் கற்பிக்குமாறு சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரையில்  குறித்த பிரச்சினை நிவர்த்தி செய்யப்படவில்லை' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .