Gavitha / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவகால மழைபெய்யாததினால் பயிர்கள் கருகி விவசாய செய்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்தின் மழைவேண்டி மாபெரும் யாகபூசையொன்று, சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில், வரலாற்று சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 09 மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.
சில்லிக்கொடியாறு கமநல அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மழை வேண்டிய யாகபூசைக்கு, அனைத்து கமநல அமைப்புக்கள், விவசாயிகள் கலந்து கொள்ளுமாறும் ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.


3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025