2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

கூட்டுறவுத்துறையின் 100 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி நாடளாவிய ரீதியில் வைபவங்கள்

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், எம்.சுக்ரி)

இலங்கையில் கூட்டுறவுத்துறை ஏற்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் எம்.ஸீ.எம்.சரீப் தெரிவித்தார்.

100ஆவது ஆண்டு விழாவை கிழக்கில் கொண்டாடுவது தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் தலைமையகத்தில் நடைபெற்றது.

மாகாண கூட்டுறவு அணையாளர் எம்.ஸீ.எம்.சரீப் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.கிருபை ராஜசிங்கம் உட்பட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

100ஆவது ஆண்டு தேசிய விழா எதிர்வரும் 2ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .