2021 ஜூன் 19, சனிக்கிழமை

நுளம்பு பெருக்க விவகாரம்:12 பேர் மீது வழக்கு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எல்.தேவ்)

தீவிரமாக நடைபெற்றுவரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த வாரத்தில் கோட்டைக் கல்லாறு பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான வகையில் தனது காணிகளை வைத்திருந்திருந்த 12 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலான பரவலான வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு அங்கமாக இவ்வாறு கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் பல்வேறு தடவைகள் எச்சரிக்கை செய்யப்பட்டு, சிரமதானங்கள் செய்யப்பட்டு முன்னறிவித்தல்கள் வழங்கப்பட்ட பின்னரே இந்தக் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .