2021 ஜூலை 26, திங்கட்கிழமை

14 வயது சிறுமியை வல்லுறவு புரிந்த 55 வயது நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுக்கல்சேனையின் பூலாக்காடு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 55 வயதான நபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர், 14 வயது சிறுமியொருவரை கடந்த வியாழக்கிழமை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை காலை பொலிஸாரால் வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .