2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மட்டக்களப்பில் 14 கிலோமீற்றர் நீளமான பாதை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் 14 கிலோமீற்றர் நீளமான பாதை அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த பாதை அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தாழங்குடா, மண்முனை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளை இணைத்து இப்பாதை அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் இப்பாதை அபிவிருத்தி பணிகள் நிறைவடையுமென இத்திட்டத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் எம்.டி.திஸாநாயக்கா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .